கிண்ணியாவில் துக்கதினம் அனுஷ்டிப்பு

0
175

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாக இன்று (25) கிண்ணியா சிவில் சமூகம் இணைந்து கடைகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளை நிற கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பிரதான வீதிகள் கடைகள் அரச திணைக்களங்கள் வங்கிகள், பள்ளிவாயல்கள், வீடுகள் என பல இடங்களிலும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டன.

உயிரிழந்த நான்கு மாணவர்கள் உட்பட ஆறு பேருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.

முள்ளிப்பொத்தானை கோட்ட பாடசாலைகளிலும் பாடசாலை இடம்பெறாமல் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here