தன்னைத் தானே விவாகரத்து செய்துகொண்ட அழகி

பிரேசிலை சேர்ந்த மொடல் அழகியான கிறிஸ் கலேரா என்பவர் தன்னைத் தானே திருமணம் செய்தார். 3 மாதங்கள் கழிந்த நிலையில் தற்போது விவாகரத்து செய்துள்ளார். 31 வயதான மொடல் அழகியான கிறிஸ் கலரா என்பவரே இவ்வாறு தன்னையே திருமணம் செய்து விவாகரத்தும் செய்துள்ளார்.

கடந்த காலங்களில் அவர் சந்தித்த காதல் மற்றும் மண முறிவுகளால் ஏற்பட்ட விரக்தியாலேயே அவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். கடந்த செப்ரெம்பர் மாதம் பிரேசிலின் பிரபல தேவாலயம் ஒன்றில் தனக்குத்தானே மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மூன்று மாதங்கள் கழித்து அவர் தன்னை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதற்கு, பொருத்தமான ஒருவரை சந்தித்ததால் காதல்மீது அதிகரித்த நம்பிக்கையே அவரின் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.