முக தழும்புகளை விரைவில் போக்க வேண்டுமா? வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!

பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி பரு ஏற்படுவதுண்டு.

அதிலும் சிலருக்கும் பரு நீங்கினாலும், அந்த இடத்தில் தழும்புகள் ஏற்பட்டு முகமே அசிங்கமாகி விடுகிறது.

அத்தகைய முகப்பருவால் ஏற்படும் தழும்புகளை விரைவில் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

• வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்துகொண்டு அதனோடு 5 மடங்கு 5 கப் அளவுநீர் விட்டு 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பிறகு அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து இலேசாக் சூடேற்றி வடிகட்டி வைத்து கொள்ளவும். இந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்துவந்தால் சரும சுருக்கங்கள் மறையும். தழும்புகள் நிறம் மறையும்.

• வெந்தயத்தை தேவையான அளவு இரவு ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த நீரோடு வெந்தயத்தை வேகவைத்து பிறகும் நீரை வெளியேற்றாமல் அதை கொண்டே வெந்தயத்தை அரைத்து முகம் மற்றும் உடலில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வர வேண்டும். இதனால் முகப்பருக்கள் இருந்தாலும் கரும்புள்ளிகள் இருந்தாலும் தழும்புகளோடு அவையும் மறையக்கூடும்.

• வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அப்படியே பேஸ்ட் போல் குழைத்து அதில் வைட்டமின் இ அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகம் முழுக்கவே தடவலாம். இதனால் தழும்புகளால் மங்கிய இடமும் பளிச்சென்று இருக்கும். கூடுதலாக கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தாலும் அவையும் மறையும். கருமையும் மறையும். வாரம் மூன்றூ முறையாவது செய்துவரவேண்டும்.

• முகத்தில் மென்மை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெந்தயத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து தடவி பயன்படுத்தினால் முகம் மிருதுவாக இருக்கும்.

• வெந்தய இலைகளை அப்படியே நீர் சேர்த்து அரைத்து முகத்தில் கரும்புள்ளிகள் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி எடுக்கவும்.