கொவிட் விழிப்புணர்வு தொடர்பிலான உலக சுகாதார அமைப்பின் தமிழ் மொழி மூலமான சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களின் பிரதிகள் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிளையின் அழைப்பின் பேரில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், வைத்தியர் அமல் ஹர்ஷா மற்றும் யுனிசெப் தலைவர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.