நாட்டை முடக்காமல் இருப்பதற்கு தீர்மானம்

0
192

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு, நாட்டை முடக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரொமேஷ் பத்திரண தொிவித்துள்ளாா்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய வைரஸ் பரவிக்கொண்டு வருகின்ற நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.

மேலும் வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பதற்காக பல சுகாதார வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவா் தொிவித்துள்ளா்ா.

அதேவேளை பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது என பொது சுகாதார பணியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here