கடமை நேரத்திற்கு பின்னர், ஏற்படும் திடீர் மின்தடைகளை சீர்செய்ய மாட்டோம்- மின்சார சபை பொறியியலாளர் சங்கம்

0
186

தமது 8 மணித்தியால கடமை நேரத்திற்கு பின்னர், ஏற்படும் திடீர் மின்தடைகளை சீர்செய்யும் சேவைகளில் இருந்து விலகவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இலங்கையில் நான்கில் ஒரு பகுதிக்கு நேற்று முன்தினம் மின்சாரத் தடை ஏற்பட்டது.ஒன்றரை மணித்தியாலயத்திற்குள் அதனை சீர் செய்ததாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

அதற்கு பொறியியலாளர்களின் பங்களிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஆனால் இன்று முதல் 4.15ன் பின்னர், மின்சார துண்டிப்புக்களை மீள் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நியு போட்ரஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்களால் பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் இலங்கை மின்சார சபைக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here