மின்சாரம் துண்டிக்கப்பட்டமை நாசகார செயற்பாடா என்பது தொடர்பில் மின்சார பொறியியலாளர்களின் உதவியுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெலிவிட்ட பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் பொதுமக்கள் பல்வேறு அவதிக்குள்ளானமை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் வர்த்தக மற்றும் செயற்பாட்டு மூலோபாயப் பிரிவின் பிரதம பொறியியலாளர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டு நாசவேலையால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் தனது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.