நாளாந்தம் சிறிய வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு நம்பமுடியாத அளவிலான பல அற்புத நன்மைகள் கிடைக்க பெறுகின்றன.
தொடர்ந்து சிறிய வெங்காயம் சாப்பிட்டு வருவதால் உடலில் நடக்கும் மாற்றங்கள்
தடிமன், நெஞ்சு படபடப்பு ஆகிய பிரச்சினைக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், தடிமன் குறைவதோடு தும்மலும் நின்று விடும் உடல் நமது சமநிலைக்கு வந்துடும்.
அதே போன்று இருதய நோயாளிகளுக்கு இப்படியான பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இதனை செய்யலாம். தூளாக நறுக்கிய சிறிய வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு முற்றிலுமாக குறைவடைந்து, நமது இதயம் பலமாகும்.
மேலும் மூல நோயினால் அவஸ்தைப்படுபவர்கள் உணவில் சிறிய வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சிறிய வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் சிறந்த பலன் கிடைக்கும்.
மேலும் மூன்று நான்கு சிறிய வெங்காயத்தை தோலை உரித்து அதனுடன் சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரண பிரச்சினைகளுக்கும் உதவுகிறது. வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீறவும் உதவுகின்றது.