எடியுகேசன் டெவலப்மெண்ட் போரம்” EDP நிறுவனத்தின் ஏற்பாட்டில்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தயடையும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக வருடம் தோறும் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு இம்முறை 18 வது தடவையாக ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் 03-11-2021 சனிக்கிழமை காலையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்விற்கு ஹட்டன் வலைய பாடசாலைகளில் ஒன்றான பொகவந்தலாவ ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலத்தில் இருந்து 2020ம் ஆண்டு சித்தியடைந்த ஐந்து மாணவர்களுக்கும் பாடசாலையூடாக முன்கூட்டியே குறித்த நிறுவனம் அழைப்பிதழை பாடசாலை அதிபருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் மேற்படி நிகழ்வு தொடர்பில் பெற்றோரோ அல்லது பாடசாலை அதிபரோ அறிந்திருக்கவில்லை என தெரியவருகிறது. பெற்றோர் குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவிய போது குறித்த நிகழ்வு தொடர்பில் தனக்கு எந்த விடயமும் தெரியாது என தெரிவித்திருக்கிறார் .
எனினும் மேற்படி நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினரின் உரிய அதிபரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்ததாக அறிய முடிகிறது. சகல பாடசாலைகளுக்கும் அனுப்பப் பட்ட பதிவுத் தபாலானது கடந்த 29 திங்கள் அன்று அதிபர்களின் கைகளுக்கு கிடைத்திருந்ததை உறுதி செய்திருக்கிறார்கள். இந்த விடயத்தில் நிகழ்வு தொடர்பில் அறிந்த மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த மன உளைச்சலுக்கும் வருத்தத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர்.
பின் தங்கிய பிரதேசமொன்றில் இருந்து கொவிற் நிலமைக்கு மத்தியிலும் பெற்றோரின் முயற்சியாலும் பாடசாலை ஆசிரியர்களின் முயற்சியாலும் மாணவர்களை சித்தியடையும் நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இது போன்ற ஊக்குவிப்பு நிகழ்வுகள் எத்தனை முக்கியத்துவமானது என்பது ஒரு அதிபருக்கு தெரியாமல் போனதா ? அல்லது குறித்த பாடசாலைக்கு வரும் தபால் போக்குவரத்து முறையற்ற விதத்தில் நடைபெறுகிறதா?
இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு நடந்துள்ள அநீதியானது மாணவர்களின் உரிமை மீறளாகும். இந்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளருக்கு அறிவிக்கப் படவிருக்கிறது. இந்த விடயம் தொடர்பில்
கல்வி அதிகாரிகளும் பாடசாலை நிர்வாகமும் கல்வியமைச்சும் உரிய விசாரணை நடத்தி மாணவர்களின் உரிமையையும் பாடசாலையின் தபால் சேவை உரிய வகையில் நடைபெறுவதையும் உறுதி செய்யுமாறு பெற்றோர் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றனர்!.
கேஜி கேஜி.