தொடர் இருமலை விரட்டும் அற்புத மருத்துவகுணம் நிறைந்த சித்தரத்தை !!

0
153

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும். மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங்காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும்.
சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.

நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும்.

கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது. சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.

சித்தரத்தையை பொடி செய்து தினமும் காலையில் சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் நல்ல பசி எடுக்கும். சித்தரத்தை பொடியுடன் கற்கண்டைக் தூள் சேர்த்து அதை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் சரியாகும்.
சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் உடல்சூடு காரணமாக வரும் இருமல் நின்றுவிடும். குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here