தலவாக்கலை நகரசபையின் 2022க்கான வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

0
198

தலவாக்கலை நகரசபையின் 2022க்கான வரவு செலவு திட்டம் 07/12/2021 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இதன்போது 2022க்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் சபையில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டாலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

ஒன்பது உறுப்பினர்கள் பங்குபற்றிய இச்சபையில் ஐந்து உறுப்பினர்கள் எதிராகவும் நான்கு உறுப்பினர்கள் ஆதரவாகவும் கையுயர்த்தியமை காரணமாகவே குறித்த வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தலவாக்கலை நகரசபை தலைவர் பாரதிதாஸன் தெரிவிக்கையில் நகரசபை 12 உறுப்பினர்களை கொண்டது இதில் முன்னாள் தவிசாளர் இடைவிலக்கப்பட 11 உறுப்பினர்களை கொண்டிருந்தது.மேலும் இன்று 2 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை எஞ்சிய 9 உறுப்பினர்களை மாத்திரமே வைத்து பஜ்ஜெட்டை முன்வைத்தோம் இருப்பினும் பஜ்ஜெட் தோற்கடிக்கப்பட்டு விட்டது.இது தொடர்பில் மேலும் கலந்துரையடப்பட்டு இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை நடத்த முயற்சியெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here