காதலித்து திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றியவர் குறித்து பொலிஸ் நிலையத்துக்கு புகார் அளிக்கச் சென்ற பெண்ணுக்கு உதவுவதாக கூறிய உதவி பொலிஸ் அதிகாரியொருவர் குறித்த அந்தப்பெண்ணை கர்ப்பமாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகிலிருக்கும் மோக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (32). இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்ட இவர், தன் மகளுடன் வசித்து வந்த நிலையில், மற்றொருவர் ஜோஸ்பினை காதலித்து மறுமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதனால், மனம் நொந்த ஜோஸ்பின் இது தொடர்பாக பளுகல் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கிறார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் உதவி பொலிஸ் அதிகாரியாக இருந்த சுந்தரலிங்கம் (வயது -40) அவருக்கு உதவுவதாக கூறி ஜோஸ்பினை பல இடங்களுக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அதனால், ஜோஸ்பின் கர்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தான் கர்ப்பமான தகவலை உதவி அதிகாரி சுந்தரலிங்கத்திடம் கூறியிருகிறார் ஜோஸ்பின். எஸ்.ஐ சுந்தரலிங்கம் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதாக கூறி, தன் நண்பர்களுடன் ஆட்டோவில் அனுப்பிவைத்திருக்கிறார்.
அவர்கள் திருவட்டாரை அடுத்த புலியிறங்கி என்னும் பகுதியில் டாக்டர் கார்மல் ராணி என்பவரின் கிளினிக்குக்கு ஜோஸ்பினை அனைத்துச் சென்றிருக்கின்றனர். ஜோஸ்பினுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறிய டாக்ர்டர் கார்மல்ராணி கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.



