14 சிறுமி சிறிய தந்தையால் வல்லுறவு

0
172

14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பசறை – வராதொலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வராதொலை> தியகொல்ல பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது சிற்றப்பாவினால் (சிறிய தந்தை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி சுமார் ஒரு வருட காலமாக சிற்றப்பாவினால் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த சிறுமியே பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைக் தொடர்ந்து சிறுமியின் சிற்றப்பா பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

சிறுமி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here