விறகு சேகரிக்க சென்ற பெண்ணை 4 நாட்களாக தேடியும் இதுவரை கிடைக்கவில்லை.

0
183

நுவரெலியா – வலப்பனை கும்புக்வெல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கும்புக்வெல மெதிலந்த பகுதியில் வசித்த 72 வயதான பீ.எம். டிங்கிரி மெனிக்கா என்ற மூதாட்டியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவர் கடந்த 6 ஆம் திகதி காலை 9.30 அளவில் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

அவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் அவரின் புதல்வர்களும் பிரதேச மக்களும் தேடி வருகின்றனர்.

இது தொடர்பில் அருகில் உள்ள தெரிபே பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் இணைந்து தேடுதலை முன்னெடுத்த போதிலும் மூதாட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

எனினும் கடந்த 8 ஆம் திகதி முன்னெடுத்த தேடுதலில் குறித்த பெண் விறகு வெட்டுவதற்காக எடுத்துச் சென்ற கத்தியை கண்டுபிடித்தனர்.

அதனை தொடர்ந்து பின்னர், அருகில் உள்ள காட்டில் தேடிய போது, உடைந்த மரக் குற்றியில் குறித்த மூதாட்டி அணிந்திருந்த உடையும், விறகு தூக்கும் போது தலையில் வைத்துக் கொள்ள எடுத்துச் சென்ற சேலையும் கண்டெக்கப்பட்டுள்ளது. எனினும் மூதாட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

இதனால் மோப்ப நாய்களை பயன்படுத்தி மூதாட்டியை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் இதுவரை காணாமல் போன டிங்கிரி மெனிக்கா தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here