சிவப்பு இலச்சினை பொறிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டரிலும் ஆபத்து

0
192

வெள்ளைப் பின்னணியில் சிவப்பு இலச்சினை பொறிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டருடன் பொருத்தப்பட்ட அடுப்பு வெடித்துள்ளது. சிவப்பு இலச்சினை பொறிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொருத்தப் பட்ட வால்வு ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
உடுநுவர எல்பிட்டிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சிலிண்டர் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. கடந்த முதலாம் திகதி எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிர்சேதம் ஏதேனும் ஏற்படவில்லையெ தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here