இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் டுவிட்டர் பக்கம் இன்று அதிகாலை சிறிது நேரம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் டுவிட்டர் பக்கத்தை உலகில் பல மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவருடைய டுவிட்டர் பக்கம் PM@narendramodi என்ற பெயரில் உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹே க்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது. ஆனால் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‛ பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்க போவதாக ஹே க்கர்கள் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதனால் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் பதிவான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



