லிட்ரோ மற்றும் லாப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த சில நாட்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட அனந்தங்களானாலேயே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரசபையின் சட்டப் பிரிவு தற்போது வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்இ இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் இணைக்கப்பட்ட உதிரிபாகங்கள் அல்லது அவற்றின் பராமரிப்பை இரண்டு எரிவாயு நிறுவனங்களும் கவனிக்கவில்லை. அந்தந்த நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்துள்ளது.
இதுபோன்ற பல சம்பவங்களில் எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்ட கருவிகள் சேதமடைந்துள்ளதாகவும்இ இதற்கு எரிவாயு நிறுவனங்கள் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.