நானுஒயா கிலாரண்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (15) காலை எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனால் வீட்டில் இருந்த எவருக்கும் எவ்வித சேதங்களும் இடம்பெறவில்லை எனவும் வீட்டின் சமையலரைக்கு மாத்திரம் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர்
குறித்த பிரதேசத்தில் இவ் கேஸ் வெடிப்பு சம்பவம் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்
எரிவாயு வெடிப்பு தொடர்பாக நானுஒயா பொலிசாருக்கும் கிராம சேவகர் அலுவருக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
டி.சந்ரு செ.திவாகரன்