தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்!

0
199

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு வருடகாலம் கல்வி பயின்று வெளியேறவுள்ள மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

குறித்த விளையாட்டு போட்டிகளை நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அபிவிருத்தி குழுவிலுள்ளவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இப்போட்டிகளை காலை 08.30 மணியளவில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உற்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயளாலர் உத்தியோகபூராவமா ஆரம்பித்து வைத்ததுடன் இந்த போட்டி நிகழ்ச்சியில் ஆண் பெண் இருபாலருக்குமான கிரிக்கெட் போட்டி, ஆண்களுக்கான கரப்பந்தாட்ட மற்றும் உதைபந்தாட்ட போட்டி பெண்களுக்கான வளைபந்தாட்ட போட்டி என்பன இடம்பெற்றது.

இப்போட்டி தொடருக்கு பிரதம அதிதியாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உற்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் பழனி சக்திவேல் மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள முக்கிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களிடையே விளையாட்டு திறனையும் ஆளுமை விருத்தியினையும் உருவாக்கும் நோக்கில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்ச்சிகளை தலைமை பயிற்றுவிப்பாளர் நரேந்திரகுமார் (சதீஸ்), உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் திரு நாணயக்கார கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பிரதீபன், உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் மகேஸ், கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சிந்துஜா ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

மேலும் இப்போட்டிகளில் பங்குபற்றி தமது விளையாட்டு திறமையை வெளிபடுத்திய மாணவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

நாட்டிலுள்ள அசாதாரண சூழ்நிலையை பொருட்படுத்தி சுகாதார வழிமுறைகளுடன் குறித்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here