தொட்டில் கயிற்றில் கழுத்து இறுகி 4 வயது சிறுமி மரணம்.

0
173

வவுனியா – அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (18) தொட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் கழுத்து சிக்குண்டதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நான்கு வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த தொட்டிலில் சிறுமி  விளையாடிக்கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் கயிறு சிக்கியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பெற்றோர் வீட்டில் தினசரி வேலைகளைச் செய்து கொண்டிருந்த நிலையில், வெகுநேரமாகியும் சிறுமியின் நடமாட்டம் தென்படாததால் தேடிப் பார்த்தபோது, சிறுமி தொட்டிலிலில் சிக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுமி மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here