தொடருந்தில் மோதி 9 வயது சிறுவன் பலி. – பெற்றோர் கவனத்திற்கு.

0
211

அளுத்கம தொடருந்து நிலையத்திற்கு அருகில் சிறுவனொருவன் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த தொடருந்தில் குறித்த சிறுவன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தர்காநகரைச் சேர்ந்த 9 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அளுத்கம தொடருந்து நிலையத்திலிருந்து மேற்படி தொடருந்து புறப்படத் தயாரானபோது, கடவையில் மறுபுறத்தில் இருந்த பெற்றோர், தம்மிடம் வருமாறு சிறுவனை அழைத்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த சிறுவன் பெற்றோரிடம் செல்ல முற்பட்டபோது, தண்டவாளத்தில் தவறி வீழ்ந்ததையடுத்து, தொடருந்தில் மோதுண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here