வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றால் மலையக மாணவர்கள் மத்தியில் ஆங்கில கல்வியினை விருத்தி செய்ய வேண்டும்.

0
204

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தமிழ் மொழியினை மாத்திரம் வைத்துக்கொண்டு வெற்றி காண முடியாது அதற்கு இணை மொழியாக உள்ள ஆங்கில மொழியினை மாணவர்கள் மத்தியில் கற்பிக்க வேண்டும் இன்று ஆங்கில பாடத்தினை 10 ஆண்டுகள் கற்றும் கூட ஆங்கிலம் பேச முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றன. இதற்கு நாம் கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் ஆங்கில மொழியினை இன்று பெரும்பாலானவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்தாலும் பேச முடியாது இதனை மாற்றியமைக்க வேண்டும் ஆகவே பாலர் பாடசாலை முதல் ஆங்கில கல்வியினை பேசுவதற்கான பயிற்சியினை பெற்றுக்கொடுக்க ஆரம்பிக்கப்பட வேண்டும் என ரொட்டரி கழகத்தின் முன்னாள் ஆளுநர் பி.டி.ஜி ஜோர்ஜ் தெரிவித்தார்.
பொகவந்தலாவ பகுதியில் வறுமை கோட்டின் கீழ் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும் பிரிடோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளுக்கும் கொரோனா தொற்றிலிருந்து மாணவர்கள் பாதுகாப்பு பெறுவதற்காக சுமார் இரண்டு மில்லியன் ரூபா செலவில் 6000 மாணவர்களுக்கான தொற்று நீக்க திரவம் மற்றும் முகக்கவசம் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பொகவந்தலாவ ஆரம்ப பராய கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நேற்று 19 நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என்பவர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஏனென்றால் ஒரு பிள்ளைக்கு கல்வியில் முதலாவது படியினை எடுத்து வைக்கும் பணியினை அவர்கள் தான் செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் சிறிய வயது முதல் நல்ல பழக்கவழக்கங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள் ஆகவே அவர்களுக்கு இன்று கொரோனா சூழலில் பாதுகாப்பான முறையில் வாழ்வது தொடர்பாக சிறிய வயது முதல் முன்னெடுக்க வேண்டிய பணி அவர்களிடம் காணப்படுகின்றன முறையாக முகக்கவசம் அணிதல், தொற்று நீக்கம் பயன்படுத்துதல் கைகழுவுதல் போன்ற விடயங்களும் சிறிய வயது முதல் பழக வேண்டும் எனவே இந்த காரியத்திற்காக நாம் பெரும் தொகை பணத்தினை செலவு செய்துள்ளோம் மாணவர்களின் கல்வி கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒருபோதும் தடைப்படக்கூடாது ஆகவே இவற்றை அனைத்து மாணவர்களும் முறையாக பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்.

அதேவேளை சிறுவயது முதல் ஆங்கிலம் பேசுவதற்கு பழகுவதற்கான வேலைத்திட்டத்தினை உங்கள் நிறுவனம் முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கான உதவிகளை ரொட்டரி நிறுவனம் ஊடாக செய்வதற்கு தயாராகயிருக்கிறோம் இன்று ஒருவன் வெற்றி பெறுவதற்காக இரண்டு விடயங்களை தான் கடைபிடிக்கின்றான் அதில் ஒன்று தனக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளுதல் மற்றையது ஏனையவர்களை மகிழ்வித்தல் இந்த இரண்டில் மிகவும் நிலையானது மற்றவர்களை மகிழ்விப்பதாகவும் அதனை இன்று ரொட்டரி கழகம் செய்து வருகிறது மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வித்து வருகிறது ஆகவே இந்த பழக்கத்தினையும் சிறிய காலத்திலிருந்தே பழக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தொற்று நீக்கம் மற்றும் முகக்கவசங்கள் ரொட்டரி மற்றும் ரொட்டெக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெற்றுக்கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரிடோ நிறுவனத்தின் இணைப்பாளர் என் கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திட்ட இணைப்பாளர் அமரச்செல்வம் ரொட்டரி மற்றும் ரொட்டெக்ட் கழங்களின் உறுப்பினர்களான ராஜலிங்கம், சரவணன், தனூசன் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஆசியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here