நுவரெலியா மாநகரசபையின் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டுவரப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன, ஸ்ரீ லஙங்கா சுதந்திரக்கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்து அதிகபடியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.
நுவரெலியா மாநகரசபை கேட்போர்கூடத்தில் (17) வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான விசேட வரவு செலவு கூட்டத்தில் மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்னவினால் முன் மொழியப்பட்ட வரவுசெலவு திட்டத்தை மாநகரசபை உறுப்பினர் சுசந்த பலியவர்தனவினால் வழி மொழியப்பட்டுவாதவிவதம் நடைபெற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மாநகரசபை முதல்வர் பிரதி முதல்வர் உட்பட 23 உறுப்பினர்களை கொண்ட நுவரெலியா மாநகரசபையில் இக்கூட்டத்திற்கு 21 பேர் கலந்துக் கொண்டனர். மாநகரசபை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களான திருமதி சிவரஞ்சனி மற்றும் இந்திக்க முனவீர ஆகிய இருவரும் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.
கூட்டத்திற்கு வருகை தந்த 21 உறுப்பினகளில் ஐக்கிய தேசிய கட்சி மாநகர முதல்வர் பிரதி முதல்வர் உட்பட 13 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா பொதுஜன கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 2 உறுப்பினர்களும் ஆதரவாக மொத்தம் 18 உறுப்பினர்களும் எதிராக ஒரு உறுப்பினரும் வாக்களித்ததனர்.
ஸ்ரீ லங்காபொது ஜன பெரமுன கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடு நிலமை வகித்தனர். நுவரெலியா மாநகரசபையில் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினால் கொண்டுவரப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, ஜெயராம் வினோஜியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த திருமதி தாமரகுமாரி ராமநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களான கீர்த்தி சமரஜீவ, மாகந்துர ரத்ன ஹிமி ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த வரவுசெலவு திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான மஹிந்த தொடம்பேகமகே மாத்திரம் எதிர்த்து வாக்களித்தாத்தார்.
இந்த வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியைச்சேர்ந்த மாநகரசபை முதல்வர் சந்தனலால் கருணாரட்ன, பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி, இராமையா கேதீஸ், நடராஜா விஸ்ணுவர்தன், ஆறுமுகம் விஜயகுமார், சட்டத்தரணி கிருஷ்ணசுவாமி விவேகாணந்தன், திருமதி திலினி விக்கிரமசிங்க, எஸ். பி. பலியவர்தன, வை. எல். சராத்சந்திர, என். பி. சீ. தயாநாயக்க, டி. எம். காமினி திஸாநாயக்க, திருமதி. வினித் அன்சனி மற்றும் எல். ஜி. மஹிந்த தாஸ ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
டி.சந்ரு