மட்டு உப்போடை ஆற்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு –

0
181

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவிலுள்ள உப்போடை ஆற்ற்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் இன்று புதன்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மீன் பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசர் ஆற்றில் கரையொதுங்கிய உப்போடை பகுதிக்கு சென்று உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேவேளை சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவினை பெற்று பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை ஜெயந்திபுரம் பகுதில் மலசல கூடத்தில் தரை சறுக்கி வீழ்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது குறிப்பித்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here