இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக BCCI தகவல்கள் தெரிவித்துள்ளன.
நேற்று இரவு அவருக்கு கொரோன பொசிட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ளது.
இதனால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதத்தில் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடதக்கது.