2022 ஆம் ஆண்டு, சவால்கள் மிகுந்ததாக இருக்கும்

0
176

கொரோனா வைரஸ் சூழ்நிலையால் அடுத்த வருடத்தில் அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் மக்கள் ஐக்கிய முன்னணியின் என்று தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுத்தல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுதொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதுடன் ஏனைய மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக சிறந்த முகாமைத்துவத்துடனான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நடவடிக்கைள் அடுத்தவருடத்தில் ஆரம்பமாகவுள்ளது. மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள ஆணையை பாதுகாத்துக்கொள்வதற்கு மக்கள் ஐக்கிய முன்னணி அர்ப்பணிப்புடன் செயற்படும். மக்கள் ஆணைக்கு தம்மை அர்ப்பணித்து அனைவரும் அதற்கு முன்னுரிமையளித்து செயற்படுவரென மக்கள் ஐக்கிய முன்னணி எதிர்பார்க்கின்றது.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி சூழ்நிலையில் எந்தவொரு நாட்டையும் நிராகரிக்காமல் ஜனாதிபதி செயற்பட்டுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக உரிய நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தார். அதனை நாம் மீண்டும் நினைவுகூரவேண்டியுள்ளது. நிதியமைச்சர் வரவு-செலவு திட்டத்தில் சமர்ப்பித்துள்ள எதிர்கால திட்டங்களை ஆக்கபூர்வமாக நடைமுறைப்படுத்த அனைத்து சக்திகளும் ஒனறிணைந்து செயற்படவேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here