இளையோர் ஆசிய கிண்ணம். – இலங்கையை வீழ்த்தி சம்பியனானது இந்தியா.

0
91

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 19 வயதுக்குட்பட்ட 2021 இளையோர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா சம்பியன் ஆகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் இன்று ஆரமபமான இப் போட்டியில் இந்திய இளையோர் அணி ஒன்பது விக்கெட்டுகள் மற்றும் 63 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கையை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டமையினால் போட்டி 38 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக யாசிரு ரொட்ரிகோ 19 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் விக்கி ஓஸ்ட்வால் 3 விக்கெட்டுகளையும், கௌஷல் தம்பே 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்.

ஆட்டம் தொடங்கிய போதும் மழை தொடர்ந்தும் பெய்த காரணத்தினால் இந்தியாவின் வெற்றிக்கு 32 ஓவர்களில் 102 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா 21.3 ஓவரில் 104 ஓட்டங்களை பெற்றி வெற்றியிலக்கை கடந்தது.

இந்தியா சர்பில் அதிகபடியாக அங்கிரிஷ் ரகுவன்ஷி 56 ஓட்டங்களையும், ஷேக் ரஷீத் 31 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here