2021 ஆண்டுக்கான அரச விருது வழங்கும் விழாவில் மலையகத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரும்,முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான மு.சிவலிங்கம் அவர்களுக்கு சாகித்தியரத்னா அரச உயர் இலக்கிய விருதினை அண்மையில் நடைபெற்ற அரச விருது வழங்கும் விழாவில் பெற்றுக்கொண்டார்.
குறித்த விருதினை பெற்று மலையகத்திற்கு பெருமை தேடித்தந்தமைக்காக அவரை கௌரவப்படுத்தும் கௌரவிப்பு விழா கொட்டகலை ஆர் டி.எம். வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மலையகத்தின் எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள்,கல்வி மான்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றியவர்கள் மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களை தனது எழுத்தாக்கத்தின் மூலம் முழு உலகத்திற்கு அறியத்தந்த பெருமை எழுத்தாளர்களையும், மு.சிவலிங்கத்தினையும் சாரும் அத்தோடு இன்று மலையக மக்களின் ஆவனங்களாக அவரது இலக்கியங்கள் காணப்படுவதாகவும்,எதிர்கால சந்ததியினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக குறித்த புத்தகங்கள் காணப்படுவதாகவும் உரையாற்றிய எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்கள்,மலையக கல்வி மான்கள் என பலரும் எடுத்துக்காட்டினர்.
அதனை தொடர்ந்து மு.சிவலிங்கம் அவர்களை பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டன. சமூக அபிவிருத்தி தாபனம் மற்றும் கொட்டகலை சிவில் அமைப்பு இணைந்து ஒழுங்கு செய்த இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பிரிவுக்கான பணிப்பாளரும் எழுத்தாளருமான சு.முரளிதரன்,முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பாலசுந்தரம், கொட்டகலை ஆசிரிய பயிற்சி கலாசாலையின் அதிபர் திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி உட்பட எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்.