லிட்ரோ எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் இன்று (04) அதிகாலை 5.30 முதல் நின்றுக்கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
மலையத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. வீடுகளில் எரிவாயு இல்லாததன் காரணமாக மண்ணெண்ணை அடுப்புக்களையும்,விறகு அடுப்புக்களையும் கொண்டே சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டன.
இதனால் பாடசாலைக்கு தங்களது பிள்ளைகளை உரிய நேரத்திற்கு அனுப்புவதில் பாரிய சிரமங்களை ஒவ்வொரு பெற்றோர்களும் எதிர் நோக்கினர்.
அரச ஊழியர்கள் சமைத்து விட்டு வேலைக்கு செல்வதிலும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. இந் நிலையில் இன்று (04) ஹட்டனில் உள்ள ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வர்த்தக நிலைய உரிமையாளர்களும் மக்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொள்வதனை காணக்கூடியதான இருந்தன. பலர் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்ததாக பலரும் தெரிவித்தனர். எனவே இது உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதே வேளை தோட்டப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் ,விற்பனை செய்வதற்காக பலர் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பெற முயற்சித்ததன் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தககது.
கே.சுந்தரலிங்கம்