ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சமூர்த்தி அனுசரனையுடன் நிர்மானிக்கப்பட்ட வீடு ஒன்றினை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் அதன் உரிமையாளரிடம் இன்று (04) ம் திகதி கையளிக்கப்பட்டது.
குறித்த வீடு சின்ன சூரிய கந்த 320 கிராம சேவகர் பிரிவில் ஓல்டன் வலயம் நோர்வூட் பகுதியில் சமூர்த்திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டு ஏனைய நிதியினை சொந்த செலவிலும் குறித்த வீடு நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் பால் பொங்கி வீட்டில் குடிபுகும் நிகழ்வுமே இன்று இடம்பெற்றன.
குறித்த நிகழ்வுக்கு மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவி செம்பகவள்ளி,சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கே.சுந்தரலிங்கம்.