அட்டன் பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்து.

0
205

அட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று (08.01.2022) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சலங்கந்தை பஸ் தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here