திகாம்பரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களும் பணிமனை உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.