நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரியவந் துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கையிருப்பைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது