கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி சுபாஷ் சுபாசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்காக 70 தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன.
எனினும் குறித்த பகுதியில் தடுப்பூசி செலுத்துதலில் மக்களின் ஆர்வம் மிகவும் குறைவாக இருந்ததாக அவர் கூறினார்.
மேலும், 70 நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் 27 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஏற்கனவே இரண்டு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற அனைவரும், மூன்றாவது தடுப்பூசியை விரைவில் போட வேண்டும், இல்லையெனில் மீண்டும் கொரோனா நோய் பரவும் அபாயம் உள்ளது என சுகாதார வைத்திய அதிகாரி சுபாஷ் சுபசிங்க தெரிவித்தார்.