கோவிட் தடுப்பூசி வழங்கும் செயல்பாட்டில் மத்திய மாகாணம் முதலிடம்.

0
140

கொரோனா நோய் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பித்து ஒரு வருட பூர்த்தியை நினைவு கூறும் முகமாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பங்குபற்றிய முன்நிலை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது அந்தவகையில் மத்திய மாகாண ஆளுநர் மேதகு லலித் யூ கமகே அவர்களின் தலைமையில் மத்திய மாகாணத்தின் கோவிட் தடுப்பு செயலணி தனது ஒரு வருட பூர்த்தியை கொண்டாடியதுடன் இக் கொடிய நோயினால் உயிர்நீத்த மக்களுக்காக அஞ்சலியும் செலுத்தியதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் உலகளவில் தடுப்பூசி வழங்கும் செயல்திட்டத்தில் இலங்கை முதல் 6 இடத்தில் உள்ளது. 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியினை ஒதுக்கீடு செய்து 20 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை இலங்கை பெற்றுள்ளது. இலங்கையிலே தடுப்பூசி வழங்கும் செயல்திட்டத்தில் முன்னணி வகிக்கும் மாகாணமாக மத்திய மாகாணம் திகழ்கின்றது. மாத்தளை மாவட்டம் 59 சதவீதமும் கண்டி மாவட்டம் 52 சதவீதமும் நுவரெலியா மாவட்டம் 42 சதவீதமாக தடுப்பூசி செலுத்தும் முதல் மூன்று மாவட்டங்களிலும் இவை இடம் பெறுகின்றன என்பது எமக்குப் பெருமை. கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நேரடி அவதானிப்பில் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் ஊடாக தடுப்பூசி வழங்கும் செயல்திட்டத்தில் நாம் முன்னின்று செயல்பட்டு வருகிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் தடுப்பூசி வழங்கும் செயல் திட்டங்களில் பிரஜாசக்தி தன்னார்வ படையணி வைத்திய அதிகாரிகள் போலீஸார் முப்படையினர் முன்னிலை களப்பணியாளர்கள் உடன் இணைந்து மலையகப் பகுதிகளில் முழுவீச்சில் தடுப்பூசிகளை வழங்கும் சட்டத்தை முன்னெடுத்து இருந்தார்கள் அவர்களுக்கு மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் செயல் திட்டத்திற்கு தலைமை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பாரத் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர் அனைத்து வைத்திய அதிகாரிகளுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் முன்னிலை களப் பணியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் மலையகப் பகுதிகளில் இந்நோய் தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதற்காக முன்னின்று செயல்பட்ட கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here