கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்காக 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களிலிருந்தே பரீட்சை எழுத முடியும் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பரீட்சை நிலையங்களிலும் வைத்தியர்கள் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுள்ள A/L மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அந்த பரீட்சை நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.