நாட்டின் மின் உற்பத்தியினை சீர்குலைப்பதற்காக மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீர் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும் ஒரு சில தேசிய ஊடகங்களிலும் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது. இது மின் உற்பத்திக்காக நீர் கொண்டு செல்லும் சுரங்வழி பாதையில் சீர் திருத்த நடவடிக்கை காரணமாகவும் மின் உற்பத்தியினை இடைநிறுத்தாது தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காகவுமே மவுசாகலை நீர்த்தேகத்தில் நீர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மவுசாகலை நீர் தேக்கத்தில் உள்ள நீர் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது குறித்து பொறியியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்….
தேசிய மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யும் மவுசாகலை நீர்;த்தேகத்தில் இருந்து சுரங்க பாதை வழியாக நீரினை கொண்டு சென்று கெனியோன் நீர்த்தேக்கத்தில் மின் பிறபாக்கிகள் மூலம் மின் உற்பத்தி செய்து அதனை தொடர்ந்து சுரங்க வழியாக லக்ஸபான பொல்பிட்டிய ஆகிய நீர் உற்பத்தி நிலையங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த சுரங்க வழி பாதைகள் 20 வருடத்திற்கு ஒரு முறை சீர்த்திருத்தப்பட வேண்டும் எனினும் 1994 ஆண்டுக்கு பின் இந்த சுரங்க வழிபாதைகள் சீர்திருத்தம் செய்யப்படவில்லை. இந்நிலையில் சுரங்க வழிபாதை வழியாக சேறு கலந்த நீர் வெளியேறுவதனால் கடந்த 2020 ஜனவாரி மாதம் கண்காணிக்கப்பட்டு. இதனை சீர்திருத்த வேண்டும் முடிவு செய்யப்பட்டே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே கடந்த காலங்களில் நீர்தேக்கங்களில் நீர் மட்டம் மிக உயர்வாக காணப்பட்டதனால் அதன் மூலம் உச்ச மின் உற்பத்தி செய்யப்பட்டன.
தற்போது நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் மிகவும் குறைந்த காணப்படுவதனால் இதனை உடன் சீர் திருத்தம் செய்வதற்கு உகந்த காலப்பகுதியாகும் ஏனெனில் அடுத்த மழைக்காலங்களில் நீர்தேக்கத்தில் நீரினை அதிக அளவில் சேமித்து நீர் மின் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்காக கொண்ட தற்போது சுரங்க வழி பாதை சீர்திருத்தும் பணிகள் ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலைமையினை அறியாத ஒரு சிலர் சமூக வலைதளங்களின் மூலமும் ஊடகங்களின் மூலமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கெனியோன் நீர் பிறப்பாக்கிகளின் மூலம் 50 மெகா வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் தற்போது பிரத்தியேக குழாயின் மூலம் நீர் விடுக்கப்பட்டு கெனியோன் நீர் தேக்கத்தில் நீர் மின் பிறப்பாக்கிகளின் மூலம் 30 மெகா வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அதனை தேசிய மின் உற்பத்திக்கு பங்களிப்பு செய்து வருகின்றன. அதனை தொடர்ந்து சுரங்க வழியாக லக்ஸபான பொல்பிட்டிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே இவ்வாறான போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்கள் அறியாமை காரணமாக வரட்சியான காலப்பகுதியில் இவ்வாறு நீரினை விணாக்குவதாக கருதுகின்றனர்.எனினும் மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே குறித்த நடவடிக்கை மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சுரங்க வழிப்பாதை சீர்திருத்தும் பணிகள் கடந்த 2 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 78 நாட்களுக்கு மார்ச்மாதம் 18 ம் திகதி வரை இரவு பகலாக சீர்திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து சுரங்க வழிபாதையாக நீரினை மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளளன. குறித்த நடவடிக்கைகள் மின்சார சபையின் கைதேர்;ந்த பொறியியலாளர்களால் உயர் தொழிநுட்பத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை தற்போது மத்திய மலைநாட்டில் வரட்சியான காலநிலை நிலவுவதனால் மவுசாகலை, கெனியோன், காசல்ரி, விமலசுரேந்திர பொல்பிட்டிய, நவலக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதும் அவசியமானதே.
மலைவாஞ்ஞன்.