கொவிட் 19 தொற்று பரவலின் மத்தியில் நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கையொன்றை முன்வைத்தாா்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் “மக்கள் பேரணி” அநுராதபுரத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உரம் அல்லது உரம் இல்லாமலேயே விவசாய சமூகத்தின் வருமானத்தை 100% அதிகரிப்பேன். அபகரிக்கப்பட்ட நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விவசாய சமூகத்திற்காக என்னை அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன். விவசாயத்திற்கு எதுவும் செய்யாதவர்கள் இன்று விவசாயிகளை ஏமாற்றி நாட்டை பாதாளத்திற்கு இழுக்க பார்க்கின்றனர்.
கடந்த 5 வருடங்களாக என்ன செய்தார்கள். என்னுடன் இணைந்து கொள்ளுங்கள். என்னை நம்புங்கள். எங்களை மீண்டும் நாட்டை முடக்குவதற்கு இடமளிக்காதிகள். தடுப்பூசியை முறையாக பெற்றுக்கொள்ளுங்கள். “வேலைநிறுத்தம் செய்பவர்களை மக்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.