பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அதில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் டிக்யகோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் கிங்கொரோ பிரிவில் நேற்று (13) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின்பக்கமாக இருந்த மண்திட்டே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்து மூன்று பேரில் தாயும் மகளும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்றும் 32 வயது தாய் ஒருவரும், 65 வயது ஆண் ஒருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வீட்டில் இருந்த உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்