மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படக்கண்காட்சி

0
176

மலையக மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றப்படாத நிலையிலுள்ள வேலைதிட்டங்களை புகைப்படங்களினூடக சித்தரிக்கும் வண்ணம் 40 மலையக இளைஞர் யுவதிகளினால் மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் 100 புகைப்படங்கள் உள்ளடங்கலான புகைப்படக்கண்காட்சி நேற்று யாழ்.ஓவியக்கூடம் கலைத்தூது கலாமுற்றம் இல 15 றக்கா வீதியிலுள்ள மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் மூலம் இந்த நாட்டுக்கு சொல்ல வருகின்ற செய்தியாக, 200 வருடமாக தீர்க்கப்படாத நிலையிலுள்ள மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை அரசாங்கமோ ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களோ செய்யமுடியாத நிலையிலுள்ளது.

ஆகவே மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுடைய திறமை மூலமாகவே இவ்வாறான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இது அந்த பிரதேசத்தில் இருந்து பிறந்த பிள்ளைகள் தமக்கான நீதியினை நிலைநாட்ட கோரியே இவ்வாறான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது, என மலையக மக்களின் சிறுவர் தேவைகளை கண்டறியும் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அழகர் செல்வராஜ் தெரிவித்தார்.

இதில், மலையக கலைத்துறை மாணவர்கள் இதர பாடவிதான செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இக் கண்காட்சி அதன் ஆரம்பத்தில் தலவாக்கல, பதுளை, பண்டாரவளை, கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்கள் ரீதியாக இக்கண்காட்சி நடாத்தப்பட்டு இப்போது யாழ்.மாவட்டத்திலும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here