ஓட்டுப்போட வந்த இடத்தில் மன்னிப்பு கோரிய நடிகர் விஜய்…வைரலாகும் வீடியோ

0
275

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி வருகிறது . சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. அனைத்து ஓட்டுப்பதிவு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

இந்நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் நீலாங்கரையில் தனது முதல் ஓட்டை காரில் வந்து பதிவு செய்தார் .விஜய் அரசியலில் நிற்க வில்லை என்றாலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் போட்டியிடுகின்றனர்.போன முறை சைக்கிளில் வந்த விஜய் தற்பொழுது தன்னுடைய காரில் வருகை தந்தார்.மிகுந்த கூட்ட நெரிசலுக்கு நடுவே தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தளபதி விஜய் தனது வாக்கை பதிவு செய்ய வந்தார். சிகப்பு நிற காரில் வந்த அவரை பார்த்தவுடன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முண்டி யத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் அவரை படம்பிடிக்க போட்டோகிராபர்கள் முண்டி அடித்ததால் அங்கு வாக்களிக்க வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து தன்னால் ஏற்பட்ட இடைஞ்சலுக்கு வரிசையில் நின்ற பொதுமக்களிடம் விஜய் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here