வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பல்ஸ்டோவ் ஹையிற்றி தோட்ட பிரதேசத்தில் பௌத்த குரு ஒருவர், சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமானது சமூக விழுமியங்களை மழுங்கடிக்கும் செயலாக பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத குருமார்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறான சமூக சீர்கேடான செயல்களில் ஈடுபடுபவர்களையும், சம்பந்தப்பட்டவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் .
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மதகுரு கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
க.கிஷாந்தன்