இன்று இந்திய அணிக்கு எதிரான முதல் டி:20 போட்டியில் இலங்கை அணி மேதவுள்ளது.

0
200

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடர் முடிவடைந்து நான்கு நாட்களுக்குள் இலங்கை இன்று மீண்டும் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் முதல் ஆட்டம் லக்னோவில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

கடந்த தொடரில் அவுஸ்திரேலியாவிடம் இலங்கை அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதிலும், இறுதிப் போட்யில் வெற்றிக்கு திரும்பியமையும், உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றமையும், இன்றைய போட்டியில் அணியின் உறுதிப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எனினும் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியின் மூன்று முக்கிய வீரர்களை இழந்தது போட்டியின் ஆரமபத்திலேயே இலங்கை அணி எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த முக்கிய வீரர்களின் முன்னணயில் வனிந்து ஹசரங்க உள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த வனிந்து, அவுஸ்திலேியாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையிலும் பாதகமான முடிவினை வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக இலங்கை அணியுடன் இந்தியா செல்லும் வாய்ப்பை இழந்தார். அதனால் இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவர் இழக்க நேரிட்டுள்ளது.

இந் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணித் தலைவர் தசுன் ஷாக்க, எஞ்சிய இரண்டு போட்டிகளில் அவரால் விளையாட முடிந்தால், அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து அணியில் இணைவார் என்பதே எங்களது நம்பிக்கை என்றார்.

வனிந்து ஹசரங்கவை தவிர அவுஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்ட நாயகனாகத் தெரிவான குசல் மெண்டிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் சிறு காயம் காரணமாக இன்றைய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகவுள்ள போட்டியில் இலங்கை அணியின் வெற்றியே இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.

ஏனெனில் சர்வதேச டி:20 நாடுகளின் தரவரிசையில் இலங்கை அணி மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால், தரவரிசையில் சரிவை சிரமமின்றி தடுக்க வாய்ப்புள்ளது.

இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்திய போதிலும், அவர்களின் முக்கிய நட்சத்திரங்களான விராட் கோஹ்லி, ரிஷப் பந்த் மற்றும் ஷர்தால் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here