யுக்ரேனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், யுக்ரேனில் வாழும் இலங்கையர்களை பாதுகாப்பான முறையில் மீட்க வேண்டும் என இ.தொ.வின் உப தலைவரும், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியுறவு அமைச்சின் செயலாளரை தொடர்புக் கொண்டு கலந்துரையாடினார்.
மேலும் துருக்கி வழியாக இவர்களை பாதுகாப்பான முறையில் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இக்கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
யுக்ரைனில் உள்ள இலங்கையர்களின் குடும்பத்தினர், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் பதற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில அவர்களை பாதுகாப்பான முறையில் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.