மலையக மக்கள் முன்னணியோடு இணைந்து செயலாற்ற போவதாக மாற்று கட்சியை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த கட்சி உறுப்பினர்கள் (27/02/2023) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகப்பூர்வமாக மலையக மக்கள் முன்னணியில் இணைந்துக்கொண்டனர்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணணை சந்தித்து இணைந்துத்கொண்டதோடு ம.ம.முன்னணி ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் இணைந்து செயலாற்றுவதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பெரும்பான்மை சமூகத்தின் பிரச்சனைகள் தீர்க்கவேண்டும்,அபிவிருத்தி பணிகளை தத்தமது பகுதிகளிலும் முன்னெடுக்க வேண்டும் மற்றும் தமது பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் உரையாற்ற வேண்டுமென சில கோரிக்கைகளை முன்வைத்து ம.ம.முன்னணியோடு இணைந்துக்கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மலைக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்,வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜனார்த்தனனும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்