மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆரம்பம்….

0
133

மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அட்டன் ரொத்தஸ் லிங்க நகர் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆலயத்தில் இன்று (01) காலை ஆறுமணி முதல் பகல் 12 வரை பாலாபிசேகம் நடைபெற்று வருகிறது.

இந்த பாலாபிசேகத்தினை தொடர்ந்து சிவராத்திரியினை முன்னிட்டு லிங்கேஸ்வர பெருமானுக்கு நான்கும் சாமமும் பால், தேன், நெய், எண்ணை, மற்றும் திரவிய அபிசேகங்களும் அலங்கார பூஜைகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த பூஜை வழிபாடுகளில் பொது மக்கள் சுகாதார பொறிமுறைகளை பின்பற்றி வழிபாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இன்று மக்கள் ஆன்மீக சிந்தனையிலிருந்து விலகி பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டுவருவதனால் உலகில் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கலியுகத்தில் இன்றுள்ளவர்களின் தீய செயல்கள் அதிகரித்துள்ளதன் காரணமாகவே இன்று சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் நிம்மதியின்றி அங்குமிங்கும் அலைந்து திரிக்கின்றனர். இன்றுள்ள இளைஞர்கள் சுகபோகங்களுக்கும், அற்பசொற்ப வாழ்க்கை முறைக்கும் அடிபணிந்து செயல்படுவதனால் இன்று அநாவசியமான செயற்ப்பாடுகள் இடம்பெறுகின்றன.

ஆபத்து எம்மை தேடிவருவதற்கும் இதுதான் காரணமாக இருந்துள்ளன. எனவே இந்த கலியுகத்தினை கடப்பதற்கு இறை பக்தி இன்றியமையாதது. ஆகவே இன்று சிவராத்திரி தினத்தில் நான்கு சாம பூஜைகளிலும் கலந்து கொண்டு எம்பெருமானின் பேரருளை பெற வேண்டும் என அட்டன் ரொத்தஸ் லிங்க நகர் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆலயத்தின் பிரமகுரு கணபதி யோகி தெரிவித்தார்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here