தனி நபர் ஒருவருக்கு மாதம் 5908 ரூபாய் போதும்: இலங்கை அரசின் புதிய அறிக்கை

0
123

தனிநபர் 5 ஆயிரத்து 908 ரூபாவில் ஒரு மாதத்திற்கான தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என அரசாங்கத்தின் சனத் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இதனை கூறியுள்ளது. இலங்கையில் ஒரு நபர் வறுமையின்றி தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள 5 ஆயிரத்து 908 ரூபாய் போதுமானது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் மாவட்டங்களுக்கு அமைய வறுமை கோடு நிலவரம் தொடர்பாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 414 ரூபாய் தேவைப்படுவதுடன் மாத்தறை மாவட்டத்தில் 5 ஆயித்து 646 ரூபாய் தேவைப்படுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here