பொதுக்கடன்களில் ஏற்பட்டிருக்கும் மிகையான அதிகரிப்பு, வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சி, எதிர்வரும் ஆண்டுகளுக்கான பாரிய நிதித் தேவை உள்ளடங்களாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, நுண்பாகப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் கடன்களின் நிலைபேறானதன்மை ஆகியவற்றை அடைந்து கொள்வதற்கான செயற்றிறன் மிக்க பொறிமுறையொன்றை இலங்கை உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்கு மத்தியில், நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு மட்டமும், பொதுக்கடன்களின் நிலைபேறான தன்மையும் மிகமோசமான நிலையை அடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.