உக்ரைனில் பொதுமக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டம்! – உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

0
175

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் மக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் நகரங்களில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ரஷ்ய ராணுவத்தை உள்ளே வர விடாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் மக்களின் தைரியத்தை குறைக்கும் வகையில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் உக்ரைன் மக்களை பொதுவெளியில் தூக்கிலிடவும், சுட்டுக் கொல்லவும் ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது உலக நாடுகளை மேலும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here