மலையக தோட்டங்களில் ஏற்படுள்ள பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்று கொடுக்கவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை வகுப்பதற்குமான விசேட கலந்துரையாடலும் ஒவ்வொரு தோட்டங்களிலும் மக்களின் பிரச்சனைகளை தீர்தற்குமான விசேட கலந்துரையாடல் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று இடங்களில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்டத்தில் தோட்டப்புற மக்களின் பிரச்சனைகளையும் தொழிற்சங்க பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்கான விசேட கலந்துரையாடலோடு விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டது. குறித்த குழு தோட்டங்களுக்கு சென்று மக்களின் பிரச்சனைகளை அறிக்கையிட்டு ம.ம.முன்னணியின் தலைமை காரியாலயத்துக்கு அனுப்புவதூடாக அவ்வறிக்கைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் வண்ணம் இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு குழுக்களும் அமைக்கப்பட்டது.
மேலும் இக்கலந்துரையாடலின் போது நாட்டின் தற்போதைய நிலை விலை வாசி உயர்வு, வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் எதிர்நோக்கு பிரச்சினைகள், தோட்ட தொழிலாளர்களின் இன்றைய நிலை, கம்பனிகளின் கெடுபிடி சம்மந்தமாக விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு மக்களை தெளிவு படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.இதன் முதற்கட்ட கலந்துரையாடல் நுவரெலியா, கொட்டக்கலை, அக்கரப்பத்தனை நகரங்களில் இடம்பெற்றதோடு ம.ம.முன்னனியின் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்